Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போலிசை டிவிட்டரில் வருத்தெடித்த நடிகர் சாந்தனு..?

On October 10, 2016
shanthanu
Share
shanthanu நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி :- அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, "அதிகாலை 2.20 மணிக்கு நான் என் மனைவியுடன் காரில் சென்றுக்கொண்டிருந்தேன். ஓட்டுனர் காரை ஓட்டிச்சென்றார். வள்ளுவர் கோட்டம் சிக்கனல் அருகே வந்தபோது போன் தவறி சீட் அடியில் விழுந்துவிட்டது. அதை தேடிக்கொண்டு இருக்கும் போது, ரோந்துப் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், நடுரோட்டில் எங்கள் காரை நிறுத்தி, காரில் அமர்ந்திருந்த என்னிடம் வந்து காரின் கதவை திறந்து மிகவும் தரக்குறைவாக பேசினார். அவர் மது அருந்திருந்தார் என்று நினைக்கிறேன். அந்த போலீஸ்காரரின் பெயர் தெரியவில்லை. பின்பு அவரின் நடவடிக்கையை கவனித்தேன், அவர் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் கூட லஞ்சம் வாங்கிக்கொண்டு இருந்தார். அந்த சூழ்நிலை மிகவும் எரிச்சலை ஏற்படுதியது.” என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், அந்த போலீஸ்காரரின் வாகன எண்ணையும் (TN 01 G 5793) பதிவு செய்திருந்தார். cuup7ucusaaes0i cuup7ubueaavbh8

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.