Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசர் !

On August 19, 2017
thirunaa
Share
thirunaa தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகள் அம்ருதாவுக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இசக்கி சுப்பையாவின் மகன் இசக்கிதுரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அம்ருதா- இசக்கிதுரை திருமணம் வருகிற செப்டம்பர் 3-ந்தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. செப்டம்பர் 3-ந்தேதி காலை திருமணம். மாலை அதே மண்டபத்தில் வரவேற்ப்பு நடைபெறவுள்ளதால் திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று அவருக்கும் அழைப்பிதழை கொடுத்துள்ளார். பின்னர் சிறிது இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து திருநாவுக்கரசர் விடை பெற்றார். அவரை வாசல் வரை வந்து ரஜினி வழி அனுப்பி வைத்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.