போன வாரம் தினகரன் வீட்டில் விஷால், இந்த வாரம் விஷால் வீட்டில் தினகரன்! நாட்ல என்னய்யா நடக்குது?

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் விஷால் சென்ற வாரம் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்தார். தன் தங்கையின் திருமணத்திற்காக அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு. ஆனாலும் இது அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் வீட்டிற்கு வந்த டிடிவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஷால் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்து இருந்தார். இதற்கு முன்னதாக விஷாலின் பிறந்த நாளான நேற்று தினகரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் விஷால் தங்கையின் திருமணத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார்.
நடந்தது இதுதான். ஆனால்,
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு சில மாதத்திலேயே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அப்படிப்பட்ட அதிரடி ஆசாமி நமது கட்சியிலிருந்தால் கட்சிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும் என தினகரன் கருதுகிறார். ஆகவே, அழைப்பு கொடுப்பது போன்று சென்று விஷாலுக்கு அரசியல் ஆசை காட்டி வந்துள்ளார் என்று செய்திகள் றெக்கை கட்டிக் கொண்டது.
விஷால் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என தினகரன் தெரிவித்தார் என்றால் அது பொதுவான கருத்து.
விஷால் பொறுத்தவரை தனக்கு நடிகர் சங்க வளர்ச்சி, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது, திருட்டு டிவிடி ஒழிப்பு, தான் நடிக்கும் படங்களின் வேலை என படு பிஸியாக இருக்கிறார். அவர் பிற்காலத்தில் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது வேறு விஷயம். ஆனால், இப்போதைக்கு விஷாலுக்கு அரசியல் ஆசையில்லை என்பதே விஷால் தரப்பிலிருந்து வருகிற தகவல்!Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
