போனார் லக்ஷ்மி மேனன்....உள்ளே வந்தார் தன்யா....

தற்போது விஜய் சேதுபதி நடித்துவரும் படம் 'கருப்பன்'. இப்படத்தை 'ரேணிகுண்டா' திரைப்படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். லக்ஷ்மி மேனனுக்கு கால் முறிவு ஏற்பட்டு காயம் அடைந்துள்ளதால், அவரால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை. தற்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் சில மாதங்கள் ஓய்வில் இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதன் காரணமாக 'கருப்பன்' படத்தில்லிருந்து ஒதுங்கிய லக்ஷ்மி மேனனுக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை தேடிகொண்டிருந்தார் இயக்குனர் பன்னீர்செல்வம். அப்போது தான் சசிகுமார் மற்றும் புதுமுகம் தன்யா நடித்த 'பலே வெள்ளையத் தேவா' திரைப்படம் வந்தது. இப்படத்தை பார்த்த இயக்குனர் பன்னீர்செல்வம், தன்னுடைய படத்திற்கு தன்யா பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து அவரையே இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
அதுதாங்க லக்ஷ்மி மேனன் போனாங்க...தன்யா வந்தாங்க...Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
