Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போதை ஊசி போட்டு, நபருக்கு 200 வசூலித்த நபர்கள் கைது!

On March 28, 2017
Lethal injections
Share
Lethal injections தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள வீரராகவபுரம் தெருவில் பணத்துக்காக போதை ஊசி போடும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் போதை ஊசி போட்டு, நபருக்கு 200 வசூலித்தவர்கள். போதை ஊசி போடப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி விசாரணையை துவங்கிய போலீஸார்,வீரராகவபுரம் தெருவில் உள்ள இசக்கி முத்து என்பவரின், வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது, இசக்கி முத்து வீட்டினுள் மறைத்து வைத்த ஊசிகள் மற்றும் போதை மருந்து பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதை ஊசி போடுவதில் மணிகண்டன் (22), புஷ்பராஜ் (36) ஆகியோருடன் சேர்ந்து இசக்கி முத்து செயல்பட்டுள்ளார். இதில் போதை ஊசிபோடுபவர்களை கூட்டி வரும் வேலையை இசக்கி முத்து செய்து வந்துள்ளார்,அவர் கூட்டிக்கொண்டுவரும் நபர் ஒருவருக்கு ஊசி போட 200 ரூபாய் வசூல் செய்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தை அந்த மூவரும் பங்கிட்டுள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய மருந்துகள் தீராத வயிற்று வலிக்கு மருத்துவமனையில் கொடுக்கும் மருந்தை, கள்ளத்தனமாக வாங்கி வந்து ஊசி போட்டு வந்துள்ளனர். ஆகையால் போலீஸார் இந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.