Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போதையில் கார் ஓட்டிய விவகாரம்- நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜர்!

On October 7, 2017
Jai_Liveday
Share
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். 1506074658-8267  ,  ,  ,  ,  ,  ,  ,  ,  , தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் சில தினங்களுக்கு முன்பு காரில் சென்ற போது அடையார் அருகே அவரது கார் விபத்தை ஏற்படுத்தியது.கார் மோதிய அதிர்ச்சியில் நடிகர் ஜெய்யும் அவரது நண்பரும் காருக்குள்ளேயே மயக்கம் அடைந்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யை எழுப்பினர். அப்போது போதையில் ஜெய் காரை ஓட்டிவந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுதியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜெய் ஜாமீனில் வெளியே வந்தார். Jai_Liveday இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஜெய் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று காலை நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.