Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போதையில் கார் ஓட்டிய வழக்கு நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

On October 7, 2017
1506132816-1554
Share
மதுபோதையில் காரில் சென்று விபத்து ஏற்படுத்திய ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், மது அருந்தி விட்டு, போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 1506132816-1554 இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நடிகர் ஜெய், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். நீதிபதி முன் மதுபோதையில் தான் விபத்தை ஏற்படுத்தியதாக ஜெய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஜெய்க்கு ரூ. 5200 அபராதமும், 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.