போட்டோ எடுக்கிறேன், வீடியோ போடுறேன்னு என் பொழப்புக்கு ஆப்பு வச்சிடாதீங்க - பால்வளத்துறை அமைச்சர் நாசர்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அதன் பின் அமைச்சர் நாசர் சில சர்சைகளில் சிக்கிய நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்ட போது அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினர்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் அமைச்சரவை மாற்றப்பட்ட போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 28ஆம் தேதி அமைச்சர் நாசரின் பிறந்தநாள் வருகிறது. இதனை முன்னிட்டு அவர் தன் ஆதரவாளர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுகிறேன் என்று கூறி ஆதரவாளர்கள் யாரும் போட்டோ வீடியோ என எதையும் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடாதீர்கள். சமூக வலைதளத்தில் போட்டோ போடுகிறேன் வீடியோ போடுகிறேன் என்று கூறி மீண்டும் என்னை குளோஸ் பண்ண பார்க்காதீங்க என்று நகைச்சுவையாக கூறினார். மேலும் முன்னதாக அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் நாசர் தன் ஆதரவாளர்களுக்கு இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
