Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போக்குவரத்து விதிமீறல்... அபராதம் வசூலிக்க புது ஐடியா!

On July 27, 2017
supi
Share
supi போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் வசூலிக்க சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸாருக்கு ஸ்வைப் மிஷின்கள் நேற்று வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி மூலம் இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதற்கான பயிற்சியும் போலீஸாருக்கு அளிக்கப்பட்டுள்ளன. misen இதன் மூலம் போலீஸார் வசூலிக்கும் தொகை முழுவதுமாக அரசுக்குச் சென்றுவிடும். கார்டுகள் இல்லாத வாகன ஓட்டிகள் வழக்கம்போல பணமாகவும் செலுத்தலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.