Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'பைரவா'விற்காக பிரம்மாண்ட கோயில் செட்!

On October 4, 2016
vijay-bairavaa-759
Share
vijay-bairavaa-759
'தெறி' படத்தின் வெற்றிக்கு பிறகு 'இளைய தளபதி' விஜய் நடிப்பில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் 'பைரவா'. இப்படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக 'ரஜினி முருகன்' புகழ் கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதனை 'விஜயா புரொடக்ஷன்ஸ்' மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்தது.

90 % ஷூட்டிங் முடிந்ததாம், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்படவுள்ளதாம். அதில் ஒரு திருவிழா பாடலை இன்று முதல் படமாக்க சென்னை பின்னி மில்லில் களமிறங்கியுள்ளது 'பைரவா' டீம். இதற்காக பிரம்மாண்ட கோயில் செட் போடப்பட்டுள்ளதாம். படத்தை அடுத்த ஆண்டு (2017) பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளது 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.