பெரியார் அம்பேத்கருக்கு நடுவே விஜய் - தெறிக்க விடப் போகும் தவெக மாநாடு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90 சதவிகிதம் பணி நிறைவு பெற்று வாயிலில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை போன்ற வடிவம் மஞ்சள் நிறத்தில் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநாட்டு திடல் பகுதியில் பெண்கள் ஆண்கள் மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் அமருவதற்கு தனித்தனியாக பார்டீசியன் அமைக்கப்பட்டு அந்த இடத்தில் 30 மொபைல் டாய்லெட் அமைக்கும் பணியும் 300 குடிநீர் வாட்டர் டேங்க் அமைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படும் இடத்தில் புல் தரைகள் மீது கிரின் மேட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் காமராஜர், பெரியார்,விஜய், அம்பேத்கர் என 70 அடி உயரம் கொண்ட உருவ கட் அவுட்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு நடுவில் சுமார் 70 அடியில் நடிகர் விஜய் நிற்பது போன்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தவெக மாநாடு முகப்பில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் படங்கள் இடம்பெறுகின்றன.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
