Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பென்னி குவிக் கல்லறை விவகாரம், வைகோவை சந்தித்த சர்ச் ஆஃப் இங்கிலாந்து குழுவினர்..

On January 19, 2018
WhatsApp Image 2018-01-19 at 4.32.32 PM
Share
WhatsApp Image 2018-01-19 at 4.32.32 PM லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் செயலாளர் சூ ஃபெரோ, மினிஸ்டர் சாரோன் பில்லிங் ஆகிய இருவரும் இன்று தாயகத்திற்கு வருகை தந்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர்.  இருவருக்கும் பொன்னாடைகள் அணிவித்து,  மலர் மாலைகள், பூங்கொத்துகளை வழங்கி வைகோ வரவேற்றார்.. செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்தான், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குயிக் அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, 100 ஆண்டுகள் கடந்து விட்டால், அந்தக் கல்லறை அகற்றப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு விடும். அதன்படி, பென்னி குயிக் அவர்களுடைய கல்லறை அகற்றப்பட இருக்கின்றது என்ற செய்தியை அறிந்து, உத்தமபாளையத்தைச் சேர்ந்த சந்தன பீர் ஒலி, பென்னி குயிக் கல்லறையை அகற்றுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.  அதற்கு, பென்னி குயிக் செய்த சாதனை, அதற்காக அவரைத் தமிழகத்து மக்கள் எந்த அளவிற்குப் போற்றிப் புகழ்கின்றார்கள் என்பதற்கான சான்று ஆவணங்களைத் தர வேண்டும். எனவே, அந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த மேற்கண்ட இரண்டு நிர்வாகிகளும் தமிழகத்திற்கு வந்தனர். அவர்களை மதுரை வானூர்தி நிலையத்தில் வைகோ அவர்கள் வரவேற்றார்கள்.இருவரும், முல்லைப்பெரியாறு பாசனப் பகுதிகளில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தனர். பொங்கல் திருநாளின் போது, முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பென்னி குயிக் அவர்களுக்குச் செய்கின்ற சிறப்புகளை நேரில் பார்த்தனர்.  இதுகுறித்துத் தங்கள் தேவாலய நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில்,  பென்னி குயிக் கல்லறையை அகற்றுவது இல்லை என அவர்கள் உடனடியாக முடிவு எடுத்து, அதற்கான கடிதத்தைத் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பி உள்ளனர்.  உலகளாவிய அளவில் ஈழத்தமிழர் பிரச்சினையை கொண்டு செல்லும் விதமாக தனது நீதி வேண்டும் என்கிற ஆங்கில பதிப்பு புத்தகத்தை இன்று தாயகத்திற்கு வருகை தந்த சர்ச் ஆப் இங்கிலாந்து என்ற குழுவினருக்கு தலைவர் வைகோ அவர்கள் வழங்கினார்கள்..... எங்கும் எதிலும் ஈழத் தமிழர் உணர்வு...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.