Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெண்கள் கிரிக்கெட் படம்...அருண்ராஜா காமராஜ், திரையுலக பிரபலங்கள் பாராட்டு!

On August 30, 2017
arunraja_kamaraj_neruppuda_3x2
Share
arunraja_kamaraj_neruppuda_3x2 ராஜா ராணி, மான் கராத்தே, ரெமோ உட்பட பல படங்களில் நடித்துள்ள அருண்ராஜா காமராஜ் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி பாடி பிரபலமானவர். இதனையடுத்து விஜய்யின் 'பைரவா' படத்தில் இடம்பெற்ற 'வர்லாம் வர்லாம் வா பைரவா'வும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்தடுத்த படங்களில் பாடல்களை எழுதி வரும் இவர், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு பாடலையும் எழுதி பாடினார். தற்போது பெண்கள் கிரிக்கெட் தொடர்பான படத்தையும் இவர் இயக்க உள்ளார். அருண்ராஜா காமராஜின் இந்த முயற்சிக்கு திரைத்துறையினர் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் நடிப்பதற்காக கிரிக்கெட் விளையாடத் தெரிந்த பெண்களுக்கான ஆடிஷனை தற்போது நடத்தி வருகிறார்களாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.