Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெண்களுக்கு இரவுப்பணி வேண்டாம் என்று கர்நாடகா அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை!

On March 28, 2017
girl
Share
girl கர்நாடகாவில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்கள், பெண்களுக்கு இரவுநேர பணி வழங்க வேண்டாம் என கர்நாடக அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான சட்டசபை குழு அரசிற்கு அளித்த பரிந்துரை: குழு உறுப்பினர்கள், பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் சென்று, அவர்களுக்கு வழங்கப்படும் பணி குறித்து ஆய்வு நடத்தியதுடன், ஊழியர்களின் கருத்து கேட்கப்பட்டது. பெண்களுக்கு இரவு நேர பணி வழங்க வேண்டாம். அவர்களுக்கு காலை அல்லது மதிய நேர பணியை ஒதுக்கலாம். ஆண்களுக்கு மட்டும் இரவு பணி வழங்கலாம். பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை. இதனால் பல குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். அல்லது குறைந்த தண்டனை மட்டும் கிடைக்கிறது. பெண் சிசு கொலை செய்யும் டாக்டர்கள், நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.