Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு : முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா..!

On September 10, 2018
37765b4ceaa8084a30e6f96932da9e80
Share

பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பல இடங்களில் ஹோட்டல்களில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கால் டேக்ஸிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்புக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.