Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெங்களூரு முழுவதும் திறக்கப்படுகிறது இந்திரா கேண்டீன்கள்!

On October 1, 2017
rahul-22
Share
rahul-gandhi4 வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா சார்பாக பெங்களூரின் 97-வார்டுகளிலும் இந்திரா கேண்டீங்கள் திறக்கப்படுவதற்கான பணிகள் துரிதமான முறையில் நடைபெற்று வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவங்கிவைக்கப்பட்ட அம்மா உணவகங்ளை முன்மாதிரியாக கொண்டு பெங்களூரில் 198- இந்திரா கேண்டீங்கள் அமைப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா 2017-2018 நிதி நிலையறிக்கையில் 100-கோடியை இதற்காக ஒதுக்கீடு செய்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 15-ந்தேதி பெங்களூர் நகரின் முதல் இந்திரா கேண்டீனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி துவங்கிவைத்தார். rahul-22 முதலில் 'நம்ம கேண்டீன்' என பெயரிடப்பட்டிருந்த உணவகங்களுக்குப்பின்னர் இந்திரா கேண்டின் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நகர்முழுவதும் 97-இந்திரா கேண்டீங்கள் திறக்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கான உணவுதயாரிக்கும் இடங்கள் நகர்முழுவதும் மொத்தம் 27-அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு அதில் 14-தயார் நிலையில் உள்ளதாகவும், ஏற்கனவே 6-உணவு தயாரிக்கும் இடங்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலை உணவு 5-ரூபாய்க்கும் மதிய உணவு 10-ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே கர்நாடக அதிகாரிகள் தமிழகம் வந்து அம்மா உணவகங்களை ஆய்வு நடத்தி சென்றிருந்தனர்,அம்மா உணவகங்களை முன்மாதிரியாக கொண்டே இந்திரா கேண்டீண்கள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.