பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் பதட்டத்துடன் சசிகலா !!

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சமீபத்திய வருமான வரித்துறை சோதனையால் பதட்டத்துடன் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பரப்பன அக்ரஹரா சிறை வட்டாரங்கள் கூறியதாவது:-
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை, நள்ளிரவு 1: 00 மணி வரை 'டிவி' சேனல்களில் செய்தி பார்த்து கொண்டிருந்தார். கடந்த சனிக்கிழமை காலை சிறையில் உள்ள நூலகத்திற்கு வந்து தமிழ் பத்திரிகைகளை தீவிரமாக படித்தார். அவருடன் இளவரசி வந்து இருந்தார். சில நாட்களாக சசிகலா பதட்டமாக காணப்பட்டார். வழக்கமாக அவரும், இவரசியும் இரவு 8:00 மணிக்கு இரவு உணவை முடித்து விட்டு, 9:00 மணிக்கு படுக்க சென்று விடுவர். ஆனால், தற்போது அதில் மாற்றம் காணப்படுகிறது. நேற்று காலை, 10:00 மணிக்கு சசிகலா நூலகத்திற்கு வந்தார். தமிழ் பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களை, 90 நிமிடங்கள் வரை படித்தார். அதன் பிறகு தனது அறைக்கு சென்று விட்டார்.
அங்கு இளவரசியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இருவரும் சில கடிதங்களை எழுதினர். இவ்வாறு சிறைத்துறை வட்டாரங்கள் கூறின.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
