புராணக்கதையின் பாத்திரங்களை அடிப்படையாக கொண்ட படத்தில் நடிக்கும் ஐஸ்வரியா ராஜேஷ்...

நம் அனைவருக்கும் பரிட்சையமான ஓர் புராணக்கதையின் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம், "இது வேதாளம் சொல்லும் கதை". அஸ்வின் காக்கமனு(இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ), குரு சோமசுந்தரம்(ஆரண்ய காண்டம், ஜோக்கர் )மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடித்து வருகின்றனர். மேலும் பிரபல குத்துசண்டை வீரரும் ஹாலிவுட் நடிகருமான கிரஃ புரிட்ஜ் வில்லன் வேடத்தில் வந்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் படத்தின் சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளார்.
இப்படத்தில் ஒரு பிரபல நடிகரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவரவ வேடத்தில் நடிக்கவிற்கிறார். படம் வெளியாகும் வரைக்கும் அந்த நடிகர் யாரு என்கிற விஷயம் ரகசியமா வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தோட பின்னணி இசையமைக்கிறார். சர்வதேச விருதுகள் பல பெற்ற இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ சஸாரா தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் இயற்கை நிலப்பகுதிகளை பதிவு பண்ணுவதில் கைத்தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறக்கூடிய சில விஷுவல் எபக்ட்ஸ், பாங்காக்கில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்கிறது. ஆசியாவில சிறந்த அனிமேஷன் கலைஞரான தாய்லாந்தை சேர்ந்த இப்படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை 'பாப்சந்த் ருக்ரந்சரித்' பதிவு செய்கிறார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிட்ப்பு ஹைதராபாத் நோக்கி பயணிக்க இருக்கிறது. இப்படத்தை ஒரு வித்யாசமான கதையை கொண்டு, உலகளாவிய திரை கலைஞர்களுடன் இயக்கி வருகிறார் ரதீந்த்ரன் பிரசாத். ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘றெக்க’ படத்தை தயாரித்த ‘காமன் மேன்’ பி. கணேஷ் மற்றும் படத்தோட இயக்குனர் ரதீந்த்ரன் பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இயக்குனர் ரதீந்த்ரன் பிரசாத்தின் ‘கொடைக்கானல் வோண்ட’ பாடல் வீடியோ உலகை திரும்பி பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாம், பாதர கழிவுகளை கொட்டிய யூனி லீவர் நிறுவனத்திடமிருந்து கொடைக்கானல் மக்களுக்கு இழப்பீட்டினையும் பெற்றுத் தந்தது. சமூக வலைத் தளங்களில் மிக வேகமாக பரவிய அந்த வீடியோ பாராட்டுகளை அள்ளி குவித்ததோடு மட்டுமின்றி மிகபெரிய ஹாலிவுட் கலைஞர்கள் அஷ்டன் குட்சர், மார்க் ருவல்லோ, நிக்கி மினாச், கெய் கவசாக்கி, மற்றும் சேகர் கபூர் போன்றவர்களால் பகிரவும் பட்டது. மேலும் இப்படத்தின் இயக்குநர் ரதீந்த்ரன் பிரசாத் எழுதி இயக்கிய “ஸ்வேயர் கார்பரேஷன்” என்னும் குறும்படம் 26 சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டதோடு மட்டுமன்றி “கேன்ஸ்” படவிழாவில் அள்ளி குவித்தது. இவ்வருடம் அவரின் “சென்னை புறம்போக்கு பாடல்” அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எண்ணூர் பகுதியின் ஏற்படுத்தப்பட்ட சுற்று சூழல் சீர்கேட்டையும், அதனை ஏற்படுத்திய அதிகாரிகளின் அலட்சியத்தியும் தட்டிக் கேட்கும் இப்பாடலை பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா பாடியுள்ளார். இதுவும் சமூக வலைத் தளங்களில் தற்சமயம் வைரலாக பரவி வருகின்றது. இப்படியாக சமூக அக்கறையுள்ள வீடியோக்களை இயற்றியுள்ள இயக்குநரிடம் இருந்து ஓர் நல்ல கதையை கொண்ட ஒரு திரைப்படத்தை நாம் எதிர்பார்கலாம்.
இப்படத்தின் குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இப்படத்தின் சில காட்சிகளை திரையிட்டனர். அக்கட்சிகளை பார்க்கும்போது, தமிழ் சினிமாவில் உலக சினிமா தரம் இருப்பது நன்றாக தெரிகிறது.Tags:
#ஜிப்ரான்#குரு சோமசுந்தரம்#Aishwarya Rajesh#Ashwin Kakamanu#Guru Somasundaram#Ghibran#Greg Burridge#ஐஸ்வர்யா ராஜேஷ்#அஸ்வின் காக்கமனு#கிரஃ புரிட்ஜ்#லெஸ்லி திரிபாதி#அக்னீஸ்வர் அன்பு கனிகா குப்தா#பிலிப் R சுந்தர்#ஆனந்த் கேரளாடின்#ராபர்டோ சாஸ்சாரா#பி.கணேஷ்#ரத்தீந்தரன் பிரசாத்#Lezlie Tripathi#Agneeshwar Anbu#Kanika Gupta#B.Ganesh#Rathindran R Prasad#Roberto Zazzara#Anand GeraldinComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
