Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புது பரிமாணத்தில் வருகிறது "வசந்த மாளிகை"..!

On September 12, 2018
Vasantha Maligai
Share
1972ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "வசந்த மாளிகை". பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் தயாரிப்பில் வந்த இப்படம் குடியின் தீமையை விளக்கியதோடு காதல் காவியமாகவும் விளங்கியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் " வசந்த மாளிகை" திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே. வி. மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, "மயக்கம் என்ன", "கலைமகள் கைபொருளே", "இரண்டு மனம் வேண்டும்", "ஏன் ஏன் ஏன் "
ஆகிய  பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் அந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தை அன்று டி. ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார்.
இப்படம் வி. சி. குகநாதன் மேற்பார்வையில்  டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.