Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புதுமுகங்கள் நடித்த மாலைநேர மல்லிப்பூ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது

On May 19, 2022
MNM First Look poster1
Share

விஜயலட்சுமி நாராயணன் தயாரித்து, அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் எழுதி இயக்கியுள்ள படம் ‘மாலைநேர மல்லிப்பூ’

மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’.

பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.

மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, ‘என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழவைக்கும்.

பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலைநேர மல்லிப்பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

'An every frame matters production' நிறுவனம் சார்பில் விஜயலட்சுமி நாராயணன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹ்ரிதிக் சக்திவேல் இசையமைத்துள்ளார். நாய்துப் டோர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெனித் பிரபாகர் கலை இயக்குநராக பணி செய்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.