Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புதுமுகங்களை வைத்து "செயல்"-நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் விஜய் பட இயக்குனர்..!

On May 16, 2018
01 (4)
Share

திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் சி.ஆர்.ராஜன் தயாரித்துள்ள முதல் திரைப்படம்  ‘செயல்.’

இந்தப் படத்தில் ராஜன் தேஜேஸ்வர் என்னும் புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகுகிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இளையராஜா ஒளிப்பதிவு செய்ய ,சித்தார்த் இசையில், ரவி அப்பலு இப்படத்தை இயக்குகிறார்.

இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “வட சென்னையில் தங்க சாலை மார்க்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர்பாராதவிதமாக அடிக்க நேரிடுகிறது. இதனால் மார்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது மக்கள் வைத்திருந்த பயம் போய்விடுகிறது இதனால் அவன் மார்கெட்டை இழக்க நேரிடுகிறது.  மீண்டும்

அந்த மார்க்கெட்டை திரும்பவும் பிடிக்க வேண்டும் என்றால், ஹீரோவை அதே மார்க்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும்படி அடிக்க வேண்டும். ஹீரோவை மார்க்கெட்டில் வைத்து அடித்தால் மட்டுமே ரவுடி தண்டபாணியின் கைக்கு மார்க்கெட் கிடைக்கும் என்ற சூழல் இருக்கிறது.

இந்த நிலையில் ரவுடி ஹீரோவை அடித்தானா..? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா..? கடைசியில் மார்க்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறோம்.

இதில் ரவுடிகளுக்கு குருவாக ‘ஆடுகளம்’ ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற ரவுடிகளாக முன்டாசுப்பட்டி ராமதாஸும், ‘சூப்பர் குட்’ சுப்ரமணியம் நடித்துள்ளனர். அதே மார்கெட்டுக்காக போட்டி போடும் ரவுடி கதாப்பாத்திரத்தில் தீனா நடித்துள்ளார். ரவுடிக்கு ஆலோசனை சொல்லும் முக்கிய பாத்திரத்தில் ‘தீப்பெட்டி’ கணேசன் நடித்துள்ளார். ரவுடியின் அடாவடி மனைவியாக வினோதினி நடித்துள்ளார். ஹீரோவின் தாயாராக ரேணுகா நடித்துள்ளார்.

படத்தில் ஹீரோ செய்யும் ஒரு நல்ல செயல், அடுத்தவர்களையும் செய்ய தூண்டுகிற செயலாக இருக்கும். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் தருஷி ஹீரோ தன்னிடம் காதலை சொல்ல வரும்போதெல்லாம் அவர் செய்யக் கூடிய  விஷயங்கள் அனைவரையும் கவரும் என்றார் இயக்குனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.