புதுச்சேரியிலும் இ.பி.எஸ்.,க்கு ஆதரவு, தினகரனுக்கு ஆப்பு!

புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும் இதுவரை தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா ஆகியோர் தங்களின் ஆதாரவை எடப்பாடி பழனிசாமிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக பிரமாண பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது, ஜெ., மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமித்தாலி ராஜாக மாற போகும் நடிகை யார்?
