Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"பிரேக்கிங் நியூஸ்" படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பானுஸ்ரீ..!

On April 13, 2019
IMG_2978
Share
நடிகை பானுஸ்ரீ மொழி மற்றும் எல்லைகள் கடந்து குறுகிய காலத்தில் மிகவும் பிரபலபமானவர். தமிழிலும் அவரது புகழை பரப்பியிருக்கிறது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2. தற்போது நடிகர் ஜெய் நடிக்கும் "பிரேக்கிங் நியூஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
"இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்" என்கிறார் பானுஸ்ரீ.
நாயகனை பிரிந்து விடுவேன் என அவர் கூறுவதற்கான காரணத்தை பற்றி ஆரவ்த்துடன் கேட்டால், சின்ன சிரிப்புடன் அதை பற்றி கூறுகிறார். அவர் கூறும்போது, "ஒவ்வொரு விஷயத்தையும் நானே சொல்லி விட்டால் தியேட்டருக்கு போய் ரசிகர்கள் எதை பார்ப்பார்கள். பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம். இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல, நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம், நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது" என்றார்.
ஜெய் மற்றும் 'பிரேக்கிங் நியூஸ்' படக்குழுவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது, "இவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும் ஜெய் மிகவும் எளிமையாக இருக்கிறார். உடன் நடிப்பவர்களுக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறார். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெளிவான ஒரு மனிதர். கதையில் என்ன சொன்னாரோ அதை எடுக்கிறார்" என்றார்.
பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டார். அடுத்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கும் இந்த படத்தில் உலக அளவில் 450CG தொழில்நுட்ப வல்லுனர்கள் வி தினேஷ்குமார் மேற்பார்வையில் Vfx பணிகளை செய்து வருகிறார்கள். படத்தில் 90 நிமிடம் அளவிலான CG காட்சிகள் இருக்கின்றன. ஜானிலால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.