Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிரபல நடிகரின் குடும்ப உறவினர் நடிக்கும் படத்தில் நடிகை நிர்வாணமாக படப்பிடிப்பு!

On February 3, 2020
IMG_20200203_205629
Share

2019ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் தாதா 87. இப்படத்தில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஒரு தாதா கதாபாத்திரமேற்று நடித்தார். இப்படத்தினை அறிமுக இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கினார். இப்படத்தில் சாருஹாசன் மற்றும் திருநங்கை கதாபாத்திரம் மிக முக்கியமாக விமர்சிக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியை அறிந்து பல முன்னணி நடிகர்கள், இயக்குநர் விஜய் ஸ்ரீஜியை அழைத்து பாராட்டினர்...ஒரு சில நடிகர்கள் அவர்களுக்கான ஒரு நல்ல கதையை உருவாக்கி அவர்களை மீண்டும் வந்து சந்திக்க விஜய் ஸ்ரீஜிக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் ஸ்ரீஜி 'பப்ஜி(PUBG - பொல்லாத உலகில் பயங்கர கேம்)' என்று தலைப்பிடப்பட்ட ஒரு புதிய படத்தினை இயக்கி வருகிறார். பப்ஜி என்னும் கொடூர வீடியோ கேம் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மையப்படுத்தி கதையை அமைத்துள்ளார் இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி.

நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தினி, ஜூலி, அனிதா, சரண் ரித்திகா மற்றும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தினங்கள் முன்பு நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா தத்தா காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த படப்பிடிப்பில் திடீரென இயக்குநர் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் தவிர மற்றவர்கள் அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதற்க்கான காரணம் என்ன என நம்முடைய ஒற்றர்கள் விசாரிக்கையில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கசிந்தது. இதன் காரணமாக அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் தவிர்த்து மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனராம்.

இந்த செய்தி அறிந்த நம் செய்தியாளர் இயக்குநர் விஜய் ஸ்ரீஜியிடம் விசாரிக்கையில், "இப்படத்தில் எந்த எந்த கட்சி எடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நிர்வாண காட்சி எடுக்கப்பட்டது பற்றி உங்களிடம் யார் சொன்னது என்று சொல்லுங்கள், நாங்கள் அப்படிப்பட்ட காட்சி எடுக்கப்பட்டதா என்று சொல்கிறோம். படப்பிடிப்பில் பல காட்சிகள் படமாகப்படும், முடிவில் படமாக வரும் போது அதில் பல காட்சிகள் இடம்பெறும், சில காட்சிகள் காணாமல் போகும் எனவே உங்கள் கேள்விக்கு தற்போது நான் எந்த பதிலும் சொல்ல முடியாது." என்று சொல்லிவிட்டு பட்டென்று கைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி. விஜய் ஸ்ரீஜி சொல்லுவதை பார்க்கும்போது படத்தில் ஐஸ்வர்யா தத்தாவின் நிர்வாண காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தான் தோன்றுகிறது.

படம் ரிலீசாகும் போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும். எப்படியோ 'பப்ஜி' படம், பப்ஜி கேமை போல் இளைஞர்களை சீரழிகாமல் இருந்தால் சரி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.