Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிரதமர் வேட்பாளராக தயாராகிறார் ராகுல்!

On September 23, 2017
rahul_gandhi
Share
rahul_gandhi காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக, கடந்த 2013ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி இருந்து வருகிறார். 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல்காந்தி தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் பேசிய ராகுல் காந்தி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார் என அறிவித்தார். இதை தொடர்ந்து வரும் நவம்பர் மாதத்தில் டெல்லியில் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேவேளை காங்கிரஸ் கட்சியின் 132 ஆண்டுகால வரலாற்றில், 19 வருடங்கள் தலைவராக இருப்பவர் என்ற பெயரை சோனியா காந்தி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.