பிரதமர் மோடிக்கு 9 பைசா காசோலை அனுப்பிய தெலுங்கானா இளைஞர்..!

பெட்ரோல் விலை கூடும்போது ரூபாய்க்கணக்கில் கூடி வருவதாகவும், ஆனால் குறையும்போது பைசாக்கணக்கில் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு 9 பைசாவுக்கான காசோலையை அனுப்பியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெட்ரோல் விலை 9 பைசா மட்டுமே குறைக்கப்பட்டது. ஆனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகமாக குறைந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 பைசா குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்த இளைஞர் சாந்து, என்பவர் பிரதமர் மோடிக்கு 9 பைசா 'செக்' அனுப்பியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் காசோலையை ஒப்படைத்துள்ளார். இந்த காசோலை பிரதமருக்கு செல்லுமா? என்பது தெரியவில்லை
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
