Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிக் பாஸ் புகழ் சினேகன் கலந்துக் கொண்ட "குரு உச்சத்துல இருக்காரு" இசை வெளியீட்டு விழா!

On November 8, 2017
Guru uchaththula irukkaru (1)
Share
Guru uchaththula irukkaru (1) தனசண்முகமணி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "குரு உச்சத்துல இருக்காரு". இப்படத்தில் குரு ஜீவா கதா நாயகனாகவும் "பைசா" திரைப்படத்தில் நாயகியாக நடித்த ஆரா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர். இவர்கள் முன்னிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களையும் பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள். "குரு உச்சத்தில இருக்காரு" திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர், இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை சினேகன், பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் எழுதி இருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.