Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

" பா.ஜ.,வுக்கு நடுக்கத்தை கொடுத்துள்ளோம் " - ராகுல்

On December 19, 2017
Rahul_Gandhi_2017_7_1
Share

 சமீபத்திய தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை பார்க்க முடிவதாக காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
"காங்கிரசுக்கு நியாயமான வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு கிடைத்த ஓட்டுக்கள் மூலம், குஜராத் மக்கள் மோடி மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. பிரசாரத்தில் மோடி ஊழல் குறித்து ஏன் பேசவில்லை. மோடி தன்னை பற்றியே பெருமையாக பேசினார். அவரது தவறான தகவல்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். மோடியின் குஜராத் மாடல் குழியில் தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த தேர்தல் மூலம் பா.ஜ.,வுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்.எங்களின் கடுமையான உழைப்புக்கு போதிய பரிசு கிடைத்துள்ளது. இந்த தேர்தல் மூலம் நாங்கள் நல்ல பாடம் கற்றுள்ளோம்.
Rahul_Gandhi_2017_7_1
மேலும் குஜராத் வளர்ச்சி என்பது வெற்று பிரச்சாரம் என்பது இதன் அம்பலமாகியுள்ளது என்றும் பாஜக-வின் பிரச்சாரம் குஜராத்தில் தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை தேர்தல் முடிவுகள் திருப்தி அளிப்பதாக ராகுல் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றசாட்டுகள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை எனவும் ராகுல் குற்றசாட்டியுள்ளார். பிரதமர் மோடியின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிவிட்டது" என ராகுல் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.