பாடல்களில் சதமடித்த சிம்பு!

 ,
நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளையும் கொண்டவர் நடிகர் சிம்பு.
 ,
பாடகராக பல படங்களில் பாடியுள்ள சிம்பு, தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி, ட்ரெண்டிங் ஆகியுள்ளது. ‘மோனிஷா என் மோனலிஷா’ படத்தில் முதல் பாடலை பாடிய சிம்பு, தன் இசை பயணத்தில் "என் ஆளோட செருப்ப காணோம்" படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமையையும் பெற்றிருக்கிறார்.
 ,
100 பாடல்கள் என்ற மைல் ஸ்டோனை எட்டியிருக்கும் சிம்பு அதை பற்றி கூறும்போது,
"பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம், என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்கள் நான் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களை பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை. இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதுமே கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவன், எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருப்பது இசையில் பரந்த மற்றும் பெரிய புரிதலை கொடுத்திருக்கிறது. எந்த அவதாரத்தில் நான் இருந்தாலும் என்னை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. என்னை பொறுத்த வரையில் 100 என்பது சாதாரண ஒரு நம்பர் தான், ஆனாலும் இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று. எனக்கான தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன்” என்றார் உற்சாகம் மிகுந்த தன்னம்பிக்கையோடு.
 ,
தற்போது ‘சக்கை போடு போடு ராஜா’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக கால்பதிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘சக்கை போடு போடு ராஜா’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக கால்பதிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.