பாகுபலி வில்லன் நடிக்கும் லீடர் 2...

தெலுங்கில் நயன்தாரா நடித்த "அனாமிகா" எனும் படத்தை இயக்கியவர் இயக்குநர் சேகர் கம்முலா.
அதன்பிறகு வருண்தேஜ் - சாய் பல்லவி நடிப்பில் பிடா படத்தை இயக்கினார். அடுத்தப்படியாக அரசியல் கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சேகர் கம்முலா அந்த படத்தை ஆந்திராவில் 2018ல் வரப்போகிற சட்டசபை தேர்தலுக்கு முன்பு வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்.
2010-ல் சேகர் கம்முலா இயக்கிய லீடர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் தயாராகிறது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ராணாவே இந்த படத்திலும் நடிக்கிறார். அதோடு, லீடர் முதல் பாகத்தை விடவும் அதிரடியாக தற்போது ஆந்திராவில் நிலவும் அரசியல் சர்ச்சைகளை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குகிறாராம் சேகர் கம்முலா.
பாகுபலி-2விற்கு பிறகு ராணா நடித்த "நேனே ராஜூ நேனே மந்திரி" படம் அரசியல் படமாக அமைந்தது. தற்போது மீண்டும் அரசியல் படத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் ராணா.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
