Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பல மாதங்களுக்குப்பிறகு கருணாநிதியை சந்தித்த மு.க. அழகிரி! மீண்டும் அரசியல் பிரவேசமா?

On October 30, 2017
alagiri-karunanidhi-meeting-30-1509358435
Share
alagiri-karunanidhi-meeting-30-1509358435 திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது மகன் மு.க.அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மகனைப் பார்த்து உற்சாகமாக சிரித்தார் கருணாநிதி. நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மு.க.அழகிரியுடன் அவரது மகன் தயாநிதி அழகிரியும் கருணாநிதியை சந்தித்து அவரது கையை பிடித்துக்கொண்டு நலம் விசாரித்தார். அப்போது மகன், பேரனைப் பார்த்து உற்சாகமாக சிரித்தார் கருணாநிதி. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பசும்பொன் சென்றதால் இந்த திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கியே இருக்கிறார் அழகிரி. அவ்வப்போது தந்தையை சந்திக்க கோபாலபுரம் வந்து செல்வதோடு சரி. இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நலம் சற்று தேறி வரும் நிலையில் தந்தையை சந்தித்து பேசியுள்ளார் . இது ஏதேனும் அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமா? என்பதை பொறுத்திருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.