பரவி வரும் டெங்கு காய்ச்சல்… தப்பிக்க சில வழிகள்!

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.
? ஏடிஸ்
? ஏனெனில் இந்த காய்ச்சலை பரப்பும் கொசுவானது பகலில் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டது.
? இந்த கொசு மழை காலங்களில் தான் இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் சாக்கடைகள் மற்றும் வீட்டில் உபயோகப்படுத்தாத கழிவறைகள் பிளாஸ்டிக் பைகள், கேன்கள்,தேங்காய் மட்டைகள், டயர்கள், போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்யும்.
? உங்கள் வீட்டையும் வீட்டைச் சுற்றியும் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்நோயை தவிர்க்கலாம்.
? டெங்கு காய்ச்சலை குணப்படுத்த ஆங்கில மருந்துகளோ தடுப்பு+சியோ கிடையாது. இன்று பலரும் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போகின்றனர்.
? இத்தகைய கொடும் நோயை இயற்கையான சித்த மருத்துவ முறையைப் பயன்படுத்தி குணப்படுத்த முடியும்.
டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் இயற்கை மருத்துவ முறைகள் :
பப்பாளி இலை சாறு :
? புதிதாக பறித்த பப்பாளி இலைகளை காம்புகளை அகற்றிவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து அதை வடிகட்டி கொள்ளவும்.
? இதை 10 மில்லி என்ற கணக்கில் நாளொன்றுக்கு 4-5 முறை பருகி வர வேண்டும்.
? இதனால் டெங்கு காய்ச்சலானது கட்டுப்படுத்தப்படும்.
மலைவேம்பு இலைச்சாறு :
? மலைவேம்பு இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
? 10 மில்லி வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருக வேண்டும்.
? மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரஸ்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.
நிலவேம்பு குடிநீர் :
? நிலவேம்புஇ சுக்குஇ மிளகுஇ பற்படாகம்இ விலாமிச்சைஇ சந்தனம்இ பேய்புடல்இ கோரைக்கிழங்குஇ வெட்டிவேர் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
? இந்த நிலவேம்பு குடிநீரை 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
