பத்து வெளிநாடுகளில் படமாக உள்ள சூர்யாவின் 37 !

'அயன், மாற்றான்' படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் இணைய உள்ள படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஒரு அரசியல் ஆக்ஷ்ன் படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்க உள்ளார்களாம். படத்தின் படப்பிடிப்பை பத்து வெளிநாடுகளில் நடத்த உள்ளார்களாம். சூர்யாவின் படம் முதல் முறையாக பத்து வெளிநாடுகளில் படமாக உள்ளது.
சூர்யா இதுவரை நடித்து வெளிவந்துள்ள படங்களிலேயே இந்தப் படம்தான் பெரிய ஆக்ஷ்ன் படமாக இருக்க வேண்டும் என இயக்குனர் கே.வி. ஆனந்த் நினைத்துள்ளார். சூர்யா நடித்த படங்களிலேயே 'அயன்' படம் தான் சூர்யாவிற்கு கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தை பெரிய அளவில் வாங்கிக் கொடுத்தது.
'அயன்' படத்தையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு பரபரப்பான கதையைத் தேர்வு செய்து வைத்துள்ளாராம் இயக்குனர் கே.வி.ஆனந்த். முன்பு அமிதாப்பச்சன் இந்தப் படத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமிதாப் இந்தப் படத்தில் நடிக்க மறுத்தால் அதற்கு மாற்றாக யாரை நடிக்க வைப்பது என்றும் படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம். அமிதாப் படத்தில் இணைந்தால் படத்தை ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட்டு, சூர்யாவை பாலிவுட் வரை கொண்டு சென்றுவிடலாம் என தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்களாம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
