Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பதவியை துறக்கவும் தயார்-ஓ.பன்னீர் செல்வம் அதிரடி..!

On August 24, 2018
OPS
Share

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு  நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் மற்றும் கேரள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டியும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருகிணைப்பாளர் பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு பெற்றுத் தந்தார். அவர் 37தொகுதியில் வெற்றி பெற செய்து வரலாறு படைந்தார், எனவே வரும் தேர்தலிலும் அவர் பெற்று தந்த வெற்றியை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நாம் மறைந்த முதல்வருக்கு செய்யும் அஞ்சலியாகும் என பேசியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அதற்காக நான் உட்பட மூத்த நிர்வாகிகள் பதவியை துறக்கவும் தயாராக இருப்பதாக உணர்ச்சி பொங்க கட்சியனரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேர்தல் வந்தால் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட, ஜெயலலிதாவால் வளர்க்கட்ட அதிமுகவின் வெற்றி நாம் எப்படி கட்டிக்காக்க வேண்டும் என்றே நான் உருக்கமாக பேசியதின் சுருக்கம். என்றார்.

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கையில் சுணக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே ? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட்டு 6 மாதத்தில் 1.22 கோடி உறுப்பினர்களை பெற்ற மாபெரும் இயக்கம் அதிமுக என தெரிவித்தார். தேர்தல் வருவதையொட்டி மூத்த நிர்வாகிகள் தங்களில் பதவிகளை துறந்துவிட்டு கட்சி பணியில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறதே என்ற மற்றொரு கோள்விக்கு யூகமான கேள்விக்கு என்னிடம் பதில் வராது என்றார்.

எங்களோடு இணைந்து வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்ற அவர், அது மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி என்றார். பாஜகவுடன் - அதிமுக கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும்போது முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.