பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே தான் போட்டி என்று கூறுகிறார் மதுசூதனன்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பணத்திற்கும், பாசத்திற்கும் இடையேயான போட்டி என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி சார்பில் போட்டியிடும் அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுகவினர், மெரினாவில் தலைவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், சட்ட ரீதியாக நாங்கள்தான் அதிமுக என்பதை நிரூபிப்போம் என்று தெரிவித்தார். பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது என்றும், பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளார்கள் என்றும் மதுசூதனன் குறிப்பிட்டார். மேலும் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் வந்து அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து ஓ.பி.எஸ் அணியினர் ஊர்வலமாக சென்று, ஆர்.கே.நகரில் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
