Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பட்டாசு ஆலையில் தீ விபத்து 18 பேர் பலி...

On June 8, 2017
mp2
Share
mp2 மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பலாகாட் மாவட்டத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் திடிரென தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்தது வந்த தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஏற்ப்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு மீதம் உள்ள தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு உடனே வெளியேறியதால் அனைவரும் உயிர்த்தப்பினர். இதற்குள் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறை பாடுகள் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அரசின் எண்ணெய் மற்றும் தானிய கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.