படம் பெயரே ஆக்ஷ்ன், அப்போ படம் முழுவதும் ஆக்ஷ்ன் கேரண்டி!

காமெடி, குடும்ப படம், த்ரில்லர், பேய் படம், ஆக்ஷ்ன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்ஷ்ன்” படம். இது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷ்ன் படமாக உருவாக்கி வருகிறது. இதற்கு “ஆக்ஷ்ன்” ( ACTION ) என்றே பெயர் சூட்டியுள்ளார்கள் .
ஏற்கனவே ஆக்ஷனில் பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள்.
சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள். இதில் பல காட்சிகளில் நடிகர் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பதாக படக்குழுவினர் சொல்கிறார்கள். இதற்காக பல கோடிகளை தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி செலவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மிக பிரம்மாண்ட படைப்பான இப்படத்தின் படப்பிடிப்பு, துருக்கி TURKEY நாட்டில் அசார்பைசான் AZARBAIZAN, கேப்படோசியா CAPPADOCIA, பாகு BAKU, இஸ்தான்புல் ISTANBUL, தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு KRABI ISLAND, பேங்காக் போன்ற இடங்களில் 50 நாட்களுக்கும், மேலும் இந்தியாவில் 50 நாட்கள் என ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் இப்படம் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம். விஷால் ஜோடியாக தம்மனாவும், மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ.கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு முடிவுற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதையை எழுதி சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தின் திரைக்கதையை சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி ஆகியோர் இணைந்து எழுத, பத்ரி வசனத்தை எழுதியுள்ளார். பாடல்களை பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா ஆகியோர் எழுத, ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். படத்திற்கான கலை பணியை துரைராஜ் மேற்கொள்ள, ஸ்டாண்ட் காட்சிகளை இரட்டையர்கள் அன்பறிவ் அமைத்துள்ளனர். படத்தின் நடன காட்சிகளை பிருந்தா, தினேஷ் அமைக்க, ஒளிப்பதிவை டியூட்லீ DUDLEE செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை செயகிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பாக R. ரவீந்திரன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
