Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படமாக உருவாகும் ‘சுஜாதா’வின் கதைகள்

On June 24, 2014
sujatha-5
Share
sujatha-5 மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை, சென்னையை சேர்ந்த பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய முழுநீள திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார்கள். தொடராகவும் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்து எல்லோரையும் கவர்ந்த 'என் இனிய இயந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' இரண்டுமே ரசிகர்கள் கண்டு களிக்கும்  வகையில் திரைப்படமாக உருவெடுக்கிறது. இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்ககூடும் என்பதை நமக்கு கண் முன் காட்டியது. விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்த கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக உள்ள இந்த காலகட்டமே சிறந்த காலம் என தெரிவித்தார் பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், இப்படங்களின் இயக்குனருமான சித்தார்த். Virtual graphics என்ற தொழில்நுட்பம் மூலம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்து விட்டு, இடம், பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில்நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே படமாக்கும் இந்த முறையால் திரைப்படம் படைப்பது எளிதாகும் என்கிறார் சித்தார்த். மிக பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்படும் 'என் இனிய இயந்திரா' நாற்பது கோடி ரூபாயில் தயாரிக்கப்படுகிறது. சென்னை தவிர, இங்கிலாந்தில் Pirates of the caribbean, Iron man 2, மற்றும் கோச்சடையான் படங்களின் Motion capture technology வல்லுனர்கள் இயங்கும் Centroid motion capture ஸ்டுடியோவிலும் நடைபெற உள்ளது இதன் படப்பிடிப்பு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.