Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படகுகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்:- பொன்.ராதாகிருஷ்ணன்.

On March 22, 2017
pon
Share
pon 'வரும் மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார். அதற்கு முன், இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்',என்று மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை, நேற்று டில்லியில், தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்கு பின், நிருபர்களிடம் மத்திய இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படுமென்றும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி விரைவில் அளிக்கப்படுமென்றும், வெளியுறவு அமைச்சர் உறுதியளித்து உள்ளார். பிரதமர் மோடி, வரும் மே மாதம், இலங்கை செல்லஉள்ளார். அதற்கு முன்பாகவே, நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் ...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.