Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பசும்பொன்னில் போலிஸ் பாதுகாப்புடன் தேவர் சிலைக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!!

On October 30, 2017
thevar 4
Share
thevar 4 முத்துராமலிங்க தேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூதாய தலைவர்களின் வருகையை முன்னிட்டு பசும்பொன்னில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவருமான முத்துராமலிங்கத் தேவர் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் இருக்கும் தேவர் நினைவிடத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. thevar 2 கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆன்மிக விழாவை நேற்று தொடங்கி வைத்தார். பலரும் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் தேவருக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று அரசியல் விழா நடைபெற்றது. அக்டோபர் 30ஆம் தேதியான இன்று ஜெயந்தி, குரு பூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில் இன்று காலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். thevar 3 இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வருகையொட்டி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவும் பிறப்பித்து அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்ற நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்கு டிடிவி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வந்த தகவலையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில்,வழக்கத்தைவிட அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் போலீஸ் பாது காப்பு மட்டுமின்றி மட்டும் 7 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவி போலீஸார் தீவிர பணியாற்றி வருகிறார்கள். தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.​

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.