Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒருவர் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு!

On October 28, 2017
self
Share
self மீண்டும் ஒருவர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கந்துவட்டி கொடுமையால் கடந்த திங்கள் கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கி முத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து அவரது மனைவி சுப்புலட்சுமி மகள்கள் மதி சரண்யா மற்றும் அட்சயப் ப்ரணிதா ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் இன்று மீண்டும் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.