Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நெல்லையில் 18 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை!

On March 24, 2017
gold
Share
gold நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய சாலையில் அமைந்துள்ள அழகர் ஜூவல்லரி என்ற நகைக்கடையில், மேற்கூரை வழியாக துளையிட்டு 18 கோடி மதிப்பிலான 60 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடை முக்கிய சாலையில் அமர்ந்துள்ளதோடு, அதிக வணீக வளாகங்கள் அமைந்துள்ள பகுதியாகவும் உள்ளது. இந்த நகைக்கடையின் மேலே கட்டிட வேலை நடைப்பெற்று வருகின்றது. நேற்று இரவு, இந்த கடையின் மேல் பகுதியில் வெல்டிங் மெஷின் உதவியால் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த அனைத்து நகைகளையும் சுருட்டி சென்றுள்ளனர். கெட்டிக்காரத்தனமாக நகைக்கடையில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை துண்டித்துள்ளனர். இருப்பினும் கடையின் முக்கிய ஹாலில் இருந்த சிசிடிவிக்கள் வேலை செய்துள்ளதாகவும். அதில் 4 கொள்ளையர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்ட வீடியோ பதிவு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் முகமுடி அணியவில்லை என்பதால், அவர்களின் உருவத்தை வைத்து போலீஸார் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.