Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நெதர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி!

On August 15, 2017
sardar_singh
Share
sardar_singh இந்தியா - நெதர்லாந்து ஹாக்கி அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2-வது ஆட்டம் நடைபெற்றது. வலுவான நெதர்லாந்து அணிக்கெதிராக புதுமுகங்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. manthip ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் மந்தீப் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது. ஆட்ட நேரம் முடிவதற்கு சற்று முன் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்தது. இதனால் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த வெற்றியுடன் இந்தியா தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.