Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

On December 17, 2018
fishermen_16233
Share

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் தமிழகஅரசு இலங்கையிடம் மன்றாடி அவர்களை விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் நெடுந்தீவு அருகேதமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறிதமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.இலங்கை அரசின் புதிய மீன்பிடி சட்ட மசோதாவின் மூலம், கைது செய்யப்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணைநடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.