Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நூழ்யிழையில் உயிர் தப்பிய பி.ஜி.முத்தையா..! Exclusive News

On August 23, 2016
p-g-muthaiya
Share
p-g-muthaiya பி.ஜி.முத்தையா கேமராமேனாக‌ பெயர் சூட்டப்படாத படத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு கடந்த 11ஆம் தேதி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி அந்த படத்தின் துனை இயக்குநர் கூறியதாவது :- அன்று படபிடிப்பின் கடைசி காட்சி அப்போது படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் மன்னர் வகேரா ஓர் விபத்து காட்சியை படமாக்கி கொண்டிருந்தார். ஓர் கார் பறந்து வந்து இன்னொரு கார் மீது மோதும் காட்சி அது, அப்போது அவர் ஒரு காரின் ஹேன்ட் பிரேக் போடாமல் இருந்ததால் பறந்து வந்த கார் மோதியதும் கீழே இருந்த கார் நிர்காமல் வந்து கேமராமேன் மீதும் அங்கு இருந்த பலரின் மீதும் பலமாக மோதியது. இதனால் கேமராமேன் பலமாக காயம் அடைந்தார் அது மட்டும் அல்ல கேமராவின் பாடி உடைந்ததால் அதை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளோம். அங்கு இருந்த அசிஸ்டன் கேமராமேனுக்கும் அடிப்பட்டது. பி.ஜி.முத்தையாவின் காலில் பலமாக கார் மோதியதால் அவரின் கால் உடைந்தது உடனடியாக அனைவரையும் நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டோம் முத்தையா இப்போது மருத்துவமனையில் இருந்து வந்து படபிடிப்பில் மீண்டும் கலந்துக் கொண்டுள்ளார் கூடிய விரைவில் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும் என்று நினைக்கின்றோம். ஸ்டண்ட் மாஸ்டரின் கவனக் குறைவால் மட்டுமே இந்த விபத்து நடந்தது என்று கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.