Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நீதிமன்ற அவமதிப்பு! பிரபல கல்வியாளர் கைதாகிறாரா?

On June 23, 2019
Isari Ganesh Contempt
Share

தெனிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று(ஜூன் 23, 2019) அன்று சென்னை மையிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையில் , விஷால் முன்னிலைல் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில், ஐசரி கணேஷ் முன்னிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும், இந்த தேர்தல் பிரச்ச்சாரத்தை இரு அணியினரும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பணம் ஒரு பெரிய விளையாட்டு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசரி கணேஷ் அங்கம் வகிக்கும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் சங்க உறுப்பினர்களை தங்கள் அணிக்கு வாக்களிக்க பணம் கொடுத்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். பிரச்சாரத்தின் ஆரம்பகட்டத்தில் இதை அந்த அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பாக்யராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதை ஒத்துக்கொள்ளவும் செய்தார்.

கல்வியாளர் கைதாவாரா என்று சொன்னோமே, யார் அந்த கல்வியாளர்? என்று நீங்க கேக்குறது புரிகிறது! நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, வழக்கின் உத்தரவு இன்று மாலை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுடைய இல்லத்தில் வழங்கப்பட்டது. உத்தரவில் நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வளவு தான் இருந்ததா இந்த உத்தரவில் என்றால், இல்லை! அந்த உத்தரவில் பகிர் என்று ஒரு விஷயமும் இருந்தது. அதாவது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சுவாமி சங்கரதாஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பை வழங்க கோரி ஐசரி கணேஷ் மற்றும் அனந்த நாராயணன் ஆகிய இருவரும் அவரை அணுகினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, நீதியையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதமாக இத்தகைய செயலில் ஈடுப்பட்ட ஐசரி கணேஷ் மற்றும் அனந்த நாராயணன் ஆகிய இருவர் மீதும் நீதிமன்றமே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்கிறது என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

நீதிபதி கண்டிக்கும் விதமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஐசரி கணேஷ் மற்றும் அனந்த நாராயணன் நீதிபதியை ஏதாவது மிக தவறான வகையில் அணுகி அவர்களுக்கு சாதகமா வழக்கின் உத்தரவை பிறப்பிக்க சொன்னார்களா என சந்தேகம் எழுகிறது. நீதிபதியை மிக தவறான வகையில் ஐசரி கணேஷும், அனந்த நாராயணனும் அணுகியிருந்தால், அவர்கள் கைதாவது உறுதி என சட்ட வல்லுநர்கள் சொல்கின்றனர். ஐசரி கணேஷ் சுமார் 26 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. அதில் ஒன்று பச்சையப்பன் கல்லூரி ட்ரஸ்டில் இவர் உறுப்பினராக இருந்த போது, அதே ட்ரஸ்டில் இருந்த ஒருவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதன் காரணமாக இவர் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.