நியாய விலை கடைகளில் சர்க்கரையின் விலை உயர்வு, நவம்பர் 6ல் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் சர்க்கரையின் விலை உயர்த்தியதால் அதனை கண்டிக்கும் வகையில் நவம்பர் 6ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- நியாய விலை கடைகளில் சர்க்கரையின் விலை ஏற்றப்பட்டிருக்கிறதே? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு தி.மு.க செயல் தலைவர் இதனை கண்டித்தும், இந்த விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். மேலும், இதனை கண்டிக்கு வகையில் வருகின்ற நவம்பர் 6ல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கு முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவத்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
