நாளை "தி.நகரில்" தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க விவாத கூட்டம்..

க்யூப் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், தியேட்டர்களின் கட்டணத்தை நெறிமுறைப்படுத்த வேண்டியும் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகத்தினரின் நடத்தி வரும் போராட்டம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதற்காக நாளை சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கூட்டம் ஒன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரைஅரங்க உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக நாளை (12/04/18) வியாழன் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நடக்கவிருக்கும் இந்த முக்கிய கூட்டத்தில் தமிழ். நாட்டில் உள்ள திரை அரங்க உரிமையாளர்களான சகோதர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது..
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
