Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் - சர்கார் விழாவில் தளபதியின் பரபரப்புப் பேச்சு..!

On October 3, 2018
46b0e2e100de50f7991b423aeba50dcf
Share
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி ரசிகர்களின் கையால் வெளியிடப்பட்டன. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கலந்து கொண்டு பேசிய போது அதிரடியான பேச்சால் சில அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர் நண்பிகளுக்கு வணக்கம். என் படங்கள் வெற்றியடையும்போது ஏற்படும் சந்தோசம் உங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் கிடைத்தது சர்காருக்கு ஆஸ்கார் கிடைத்த மாதிரி. மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது. அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். . கலைக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் சின்னத்திரையில்ல் தனி சர்கார் நடத்தும் கலாநிதிமாறன். . வெற்றிக்காக எவ்வளவு வேணா உழைக்கலாம். ஆனா நாம் வெற்றியடையக் கூடாதென்று பல பேர் உழைக்கிறாங்க. . உசுப்பேத்தறவங்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இதை எல்லோரும் கடைபிடிங்க. . எல்லாரும் அரசியல்ல இறங்கி சர்கார் அமைப்பாங்க நாங்க சர்கார் அமைச்சுட்டு அப்புறமாக வர்றோம். இந்த சர்கார் பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க. . நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் உண்மையாக இருப்பேன். ஒரு கட்சியில் தலைவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். . இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.