Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நான் தண்ணி அடிக்கிற எம்.ஜி.ஆர் : ராணா ரகளை !

On July 29, 2017
Naan Aanaiyittal Press Meet Photos (3)
Share
Naan Aanaiyittal Press Meet Photos (3) ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’யில் அனைவரும் பாரட்டகுடிய கதாபாத்திரம் பல்வாள் தேவனாக வந்து வில்லன்னுக்கேயுரிய பாணியை தனியாக காட்டியவர் ராணா! டோல்லிவூட் இயக்குனர் தேஜா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கும் ‘நான் ஆணையிட்டால்’ படத்திலும் அதே பல்வாள் தேவன் கதாபாத்திரத்தை காட்ட வருகிறார் பாகுபலி ராணா. இப்படத்தில் அவருக்கு எதிர்மறை கதாபாத்திரம் கிடையாது கதாநாயகன்! சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநரிடம், ‘படத்துக்கு மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "எங்க வீட்டுப் பிள்ளை" பட பாட்டை தலைப்பு வைப்பதற்கு காரணம் ? என்ன என்று கேட்டதற்கு ‘‘இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்பாபு அவர்களின் அப்பா ராமாநாயுடு தெலுங்கில் எடுத்த படத்தின் தமிழ் ரீமேக்தான் எம்ஜிஆர் நடிச்ச ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம். அந்தப் படத்தில் இடம் பெற்று சரித்திரம் படைத்த பாடலின் முதல் வரி எங்க படத்தின் கதைக்கு பொருந்தியுள்ளதால் அந்த பாடலின் வரியை தலைப்பா வெச்சிருக்கோம். அது தவிர, நானும் மக்கள திலகத்தின் ரசிகன்தான்! சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தமிழக எம்எல்ஏக்களை கூவத்துர் ரெசார்ட்ல வெச்சிருந்தது தமிழ்நாட்டுல பரபரப்பாச்சுல்ல. ஆச்சரியம் பாருங்க… அந்த சம்பவம் இங்கே நடக்குறதுக்கு முன்னேயே அதே மாதிரி சில சீன்களை நாங்க எங்க படத்துக்காக ஷூட் செய்திருந்தோம்! கூவத்தூர் சம்பவம் நடந்தபிறகு அதை மையமா வெச்சு திரும்பவும் சில காட்சிகளை எடுத்திருக்கோம். வசனம்லாம் நெருப்பா இருக்கும். தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய விஷுவல் டிரீட் காத்திருக்கு’’ என்றார். ‘‘இன்றைய அரசியல் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்திருந்தால் அவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்கிற மாதிரியான கதைகளமாக இப்படம் இருக்கும். படத்துல நானும் எம்ஜிஆர் மாதிரிதான் டிரெஸ்லாம் பண்றேன். எம்ஜிஆர் தன் படங்கள்ல சிகரெட் பிடிக்கிற மாதிரி, மது அருந்தற மாதிரி நடிக்க மாட்டார். ஆனா, என்னோட கேரக்டர் அவ்ளோ நல்லவனா இருக்காது. கொஞ்சம் தரை லோக்கலா இறங்கி அடிக்கிற மாதிரி இருக்கும்! எம்ஜிஆர் படப் பாடல்கள்ல எவர்கிரீன் ஹிட்டான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்…’ பாட்டும் இந்தப் படத்துல இருக்கு’’ என்கிறார் ராணா. படத்தில் இவருக்கு ஜோடி காஜல் அகர்வால்!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.